Panam Kilangu Benefits: பனங்கிழங்கு சாப்பிடுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு கிடைக்கும் பலன்.!

 மண்ணின் அடியில் இருக்கும் கிழங்கு வகைகளை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக் கூடாது என்று கூறுவார்கள்.

Panam Kilangu Benefits

Panam Kilangu Benefits:

காரணம், மண்ணுக்கு அடியில் விளைகின்ற கிழங்கு வகைகளில் அதிக அளவில் ஸ்டார்ச் மற்றும் சர்க்கரைச் சத்து இருக்கும் என்பதுவே.

ஆனால் அத்தகைய கிழங்கு வகைகளில் பனங்கிழங்கு மட்டும் நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம்.

ஏனெனில் அதில் அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் காணப்படுகின்றன.

நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நார்ச்சத்து பனங்கிழங்கில் கிடைக்கிறது.

அதேபோல பனங்கிழங்கில் உள்ள சில நுண்ணூட்டச்சத்துக்கள் கணையத்தில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.

வயிறு பிரச்சனை :

நம் உடலில் ஏற்படும் வயிறு சம்பந்தம்பட்ட பிரச்சினைகளுக்கு மலச்சிக்கலே காரணமாகிறது.

மலச்சிக்கல் ஏற்படக்காரணம் நம்முடைய உணவுப் பழக்கம் தான். அதற்கான தீர்வும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் தான்.

அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிட்டால் மெட்டபாலிசம் அதிகரிக்கும். மலச்சிக்கல் பிரச்சினை வராது.

பனங்கிழங்கும் அப்படித்தான். பனங்கிழங்கில் மிக அதிக அளவில் நார்ச்சத்து இருக்கிறது.

இது மலச்சிக்கலை சரிசெய்து வயிற்றைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

எடை அதிகரிக்க:

ஒரு சிலர் எவ்வளவு அதிகமாகச் சாப்பிட்டாலும் உடல் தேறாமலே இருப்பார்கள். அவர்களுக்கு பனங்கிழங்கு நல்ல தீர்வாக இருக்கும்.

பனங்கிழங்கில் அதிக அளவிலான புரதமும், நார்ச்சத்தும் இருப்பது மட்டுமல்லாது, நிறைய உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.

மிகவும் ஒல்லியாக இருப்பவர்கள் தொடர்ந்து பனங்கிழங்கை உணவில் சேர்த்துக் கொண்டால் அவர்களுடைய உடல் எடை அதிகரிக்கும்.

உடல் மெலிய வேண்டும் என்று நினைப்பவர்களோ உடல் பருமனாக உள்ளவர்களோ பனங்கிழங்கு சாப்பிட வேண்டும் என்றால் ஆசைக்காக மட்டும் ஒன்றிரண்டு சாப்பிடுங்கள். நிறைய எடுத்துக் கொள்ள வேண்டாம்.

ரத்த சோகை பாதிப்பு:

நம் உடலில் ரத்த ஓட்டம் குறைவாக இருப்தே பல பிரச்சினைகளை உடலில் ஏற்படுத்துகிறது.

இரும்புச் சத்து குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சினை தான் ரத்த சோகை, இதில் ரத்த சிவப்பணுக்களின் அளவு குறைவாக இருக்கும்.

பனங்கிழங்கு இரும்புச்சத்து அதிகமுள்ள ஒரு உணவுப் பொருள்.

இதை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் ரத்த சோகை போன்ற பிரச்சினைகள் தீரும்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கிழங்கு சிறந்த உணவாக இருக்கும்.

பனங்கிழங்கை காய வைத்து பொடி செய்து அந்த மாவை எடுத்து, காலை நேரத்தில் கூழ் அல்லது கஞ்சி செய்து குடித்து வந்தால் உடல் வலிமை பெறும். நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பனங்கிழங்கை உண்ணும் முறை :

பனங்கிழங்கிலும் ஓரளவு ஸ்டார்ச் இருப்பதால், அதை சாப்பிடும்போது சிலருக்கு வாயுத் தொல்லை ஏற்படும். சிலருக்கு உடலில் பித்தத் தன்மை அதிகரிக்கும்.

பித்தத் தன்மை இருப்பவர்கள் பனங்கிழங்கை சாப்பிடும்போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

பனங்கிழங்கு சாப்பிடும்போது வாயுத்தொல்லையால் அவதிப்படுகிறவர்கள், பனங்கிழங்கை வேகவைக்கும்போது அவற்றுடன் பூண்டையும் சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும்.

உடலில் பித்தம் அதிகமாகாமல் இருக்க வேண்டுமென்றால், பனங்கிழங்குடன் மிளகு சேர்த்து சாப்பிடலாம்.

Also Read: Can we eat paneer daily? பன்னீரை எப்படி நாம் சரியான முறையில் சாப்பிடலாம்..?

இரும்புச்சத்து அதிகரிக்க:

பனங்கிழங்கை லேசாக உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்கு வெயிலில் காய வைத்து வற்றலாக எடுத்து அதனை இடித்து, அதனுடன் பனை வெல்லத்தையும் சேர்த்து பொடி செய்து, அதை சலித்து எடுத்து டப்பாவில் போட்டு அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதை தினமும் அரை ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வர உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும். இதனால் ரத்த சோகையும் நீங்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Why Earth Is Important: மனிதனால் தீண்டப்படாமல் இருப்பது வெறும் 3% நிலம் மட்டுமே..!

Flowers Used as Medicine: உடல் நோயை விரட்டும் பூக்கள்..! அறிந்து உண்போம், பயன்பெறுவோம்..!