Why Mosquito Bites Only Me: ஏன் என்ன மட்டும் கொசு கடிக்குது..? அறிவியல் கூறும் காரணம்..!

 Why Mosquito Bites Only Me: ஏன் என்ன மட்டும் கொசு கடிக்குது..? அறிவியல் கூறும் காரணம்..!

மழைக் காலத்தில் எல்லோருக்கும் ஏற்படும் பிரச்சனை கொசு கடிப்பது தான். கொசுக்கடியால் மனிதனின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அதே நேரத்தில் பல வைரஸ் காய்ச்சல் வருவதற்கு கூட இந்த கொசுக்களே காரணமாக இருக்கின்றன.



Why Mosquito Bites Only Me:

நாம் கூட்டாக அமர்ந்து கொண்டிருக்கும்போது ஒருவர் மட்டும் கொசுவை அடித்துக்கொண்டு, ஏன் இந்தக்கொசு என்ன மட்டும் கடிக்குது? என்று கொசுக் கடியால் புலம்பிக் கொண்டிருப்பார்.

எங்களுக்கு கொசு தெரியலையே ஒருவேளை கொசுவுக்கு உன் ரத்தம்தான் பிடிச்சுருக்கு போல என விளையாட்டாக பேசுவோம். அது ஏன் தெரியுமா…?

கொசு கடி பற்றிய நம் குழப்பத்தை தீர்க்க நடத்தப்பட்ட ஆய்வு குறித்து, மெடிக்கல் எண்டோமொலோஜி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கொசுக்களுக்கு மனிதர்களை வகை ரத்த பிரிவு மீது தான் பிரியம் அதிகமாம். மற்ற வகை ரத்தம் உடையோரை கடிக்கும் கொசுக்களை விட ‘O’ பிரிவு கொண்டவர்களுக்குத் தான் கொசுக்கடி அதிகம் கிடைக்கும்.

அதாவது மற்ற ரத்த வகை மனிதர்களை ஒரு முறை கொசு கடித்தால், ‘O’ பிரிவு உள்ள மனிதர்களை இரண்டு முறை கடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், கொசுக் கடிப்பது நாம் உருவாக்கும் சுரப்புகளுடன் தொடர்புடையது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கார்பன் டை ஆக்ஸைடு:

எப்படி ‘O’ வகை ரத்தம் கொசுக்களுக்கு பிடிக்கிறதோ, அதேபோல் கார்பன் டை ஆக்ஸைடும் கொசுக்களால் விரும்பப்படும் விஷயமாகும்.

கார்பன் டை ஆக்ஸைடை எவரின் உடல் அதிகமாக வெளியிடுகிறதோ அவர்களுக்கு கொசுக்கடி அதிகமாக இருக்கும்.

இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி போன்ற மற்ற சக்திகள் அதிகமாக இருக்கும்.

உங்கள் உடலில் இருந்து எந்த அளவுக்கு கார்பன் டை ஆக்ஸைடு வெளியேருகிறதோ, அந்த அளவுக்கு கொசுக்களால் நீங்கள் ஈர்க்கப்படுவீர்கள்.

உடற்பயிற்சி செய்யும் போது நம்முடைய உடலில் இருந்து அதிக அளவில் வியர்வை ஏற்படும்.

அதுமட்டுமின்றி, உடற்பயிற்சியால் நமது தசைகள் இறுக்கமாகி கடினமடையும். அப்படி கடினமாக தசைகளை இலகுவாக்க, இயற்கையாகவே நமது உடல் லாக்டிக் அமிலத்தை சுரக்கும்.



லாக்டிக் அமிலம் இறுக்கமாக தசையை இலகுவாக்க உதவும். இந்த லாக்டிக் அமிலம் நமது தோலில் இருந்து வெளியேறுவது, கொசுக்களுக்கு நாம் தரும் சிக்னல் ஆகும்.

நமது உடல் தரும் சிக்னலை கொசு எப்படி தெரிந்து கொள்கிறது என்ற கேள்வி நமக்குள் எழும்.

கொசுக்களுக்கு இதெல்லாம் எப்படி தெரியும் என்றால், அவைகளின் கண்கள் வழியாகவே இதை எல்லாம் பார்த்து தெரிந்து கொள்கிறது. கொசுக்கள் சிறந்த பார்வைத் திறன் கொண்டவை.

கொசு உங்கள் உடலில் கடிப்பதற்கு முன் தரையில் அமர்ந்து உங்களை உற்று நோக்கி, கண்காணித்த பின்னரே உங்களை கடிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கீழே அமர்ந்து இருந்து கொசு பார்க்கும் போது அவற்றின் கண்களுக்கு அடர் நிறங்கள் தான் முதலில் தெரியுமாம்.

கருப்பு நிறம் கலந்த உடைகள்:

அதேபோல் நீங்கள் எப்படிப்பட்ட நிறத்தில் உடை அணிந்துள்ளீர்கள் என்பதும் கொசு கடிப்பதற்கு முக்கிய காரணம்.

கருப்பு மற்றும் கருமை நிறம் கலந்த உடைகளை அணிந்திருக்கும் போது கொசு கடிப்பது அதிகமாக இருக்கும்.

கொசுக்களின் கண்களுக்கு வெளிர் நிறங்கள் அவ்வளவு எளிதில் தெரியாது என்றும் ஆய்வில் அறியப்பட்டுள்ளது.

அதேபோல் வெப்ப நிலை அதிகம் கொண்ட உடல்களையும் கொசுக்களுக்கு மிகவும் பிடிக்குமாம்.

ஏனெனில் அவர்களுக்கு இரத்தத்தின் அடர்த்தி அதிகமாகவும், தோலிற்கு மிக அருகிலும் இருப்பதால் இரத்தத்தை எளிதில் உறிஞ்சுவிடலாம்.

இவை மட்டுமின்றி நீங்கள் உடற்பயிற்சி செய்து அதனால் உடலின் வெப்பம் அதிகரித்து விட்டால் கூட கொசு உங்களைக் அதிகமாகக் கடிக்கும்.

மது குடிப்போரை கொசு அதிகமாக கடிக்குமா என்பது குறித்த ஒரு ஆய்வில், பீர் மட்டுமே குடிப்பவர்கள் கொசுக்களை அதிகமாக ஈர்ப்பர் என்று தெரிய வந்துள்ளது.

அவர்களைத் தான் கொசுக்கள் அதிகமாக கடிக்கும். கொசுக்களுக்கு கூட சில வகை சுவை பிடித்து விடும், அதனால் தான் கூட்டத்தில் இருந்தால் கூட ஒருவரை மட்டுமே குறிவைத்து கொசுக்கள் கடிக்கின்றன.

மழைக் காலம் துவங்க சில நாட்களே உள்ள நிலையில் தற்போதே கொசுக் கடி பிரச்சனை துவங்கி விட்டது.

Also Read: Radish Benefits for Health: இதயத்தின் நண்பன் – சிவப்பு முள்ளங்கி சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்..!

கொசுக் கடியால் சளி, டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா போன்ற பல அபாயகரமான நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. மழைக் காலம் மழையுடன் சேர்த்து பல சுகாதார சிக்கல்களையும் கொண்டு வருகிறது.

கொசு கடியைத் தவிர்க்க முடியாது தான் என்றாலும், கொசு விரட்டி மற்றும் கொசுவை அழிக்கும் மருந்தினை பயன்படுத்தி கொசு அதிகரிப்பதை தவிர்க்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Why Earth Is Important: மனிதனால் தீண்டப்படாமல் இருப்பது வெறும் 3% நிலம் மட்டுமே..!

Flowers Used as Medicine: உடல் நோயை விரட்டும் பூக்கள்..! அறிந்து உண்போம், பயன்பெறுவோம்..!