Kandankathiri Uses: முட்கள் நிறைந்த கண்டங்கத்திரியில் இவ்வளவு மருத்துவப் பயன்களா..!
Kandankathiri Uses: முட்கள் நிறைந்த கண்டங்கத்திரியில் இவ்வளவு மருத்துவப் பயன்களா..!
கண்டங்கத்திரி என்பது செடி வகையை சேர்ந்தது. இவை பெரும்பாலும் குப்பை மேடு, கரிசல் மண், செம்மண், வண்டல் மண் போன்ற இடங்களில் வளரக் கூடியது.
Kandankathiri Uses:
இதன் செடிகள் முழுவதும் முட்கள் இருக்கும், பூக்கள் நீல நிறத்தில் பூக்கும், சிறிய கத்தரிக்காய் வடிவிலான காய் காய்க்கும், பழுத்ததும் மஞ்சள் நிறமாக இருக்கும்.
கத்தரிக்காய் வகைகளில் ஒன்றான இதன் இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் என ஒவ்வொன்றும் மருத்துவ குணம் நிறைந்தவையாக காணப்படுகிறது.
இதன் பழத்தை உணவாக எடுத்துக் கொண்டால் நம் உடலின் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி, நெருப்பில் சுட்டு, பொடியாக்கி, இலைகளில் வைத்துச் சுருட்டு போலச் செய்து புகை பிடிப்பதன் மூலம் பல்வலி, பல் கூச்சம் தீரும்.
நுண்ணுயிர்கள் நம் உடலை பாதிக்காமல் இருப்பதற்கு கண்டங்கத்தரியின் பழங்கள் மற்றும் தண்டுகள் பயனுள்ளதாக இருக்கின்றன.
கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி பயன்படுத்தினால் தலைவலி மற்றும் வாத நோய்கள் சரியாகும்.
பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகைகள் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் திறன் கொண்டவையாக இருக்கும்.
எனவே, கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதோடை ஆகிய மூலிகைச் செடிகளின் இலைகளை சம அளவு எடுத்து நிழலில் காயவைத்துப் பொடியாக்கி பயன்படுத்தவும்.
சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போவதற்கு, இந்த பொடியை தினமும் இரு வேளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் போதும், சரியாகிவிடும்.
வறட்டு இருமலுக்கு:
வறட்டு இருமலுக்கு கண்டங்கத்திரி வேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், சீரகம் 5 கிராம், கொத்தமல்லி 1 பிடி ஆகியவற்றை 2 லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து அரை லிட்டராக காய்ச்சி 4 முதல் 6 முறை 100 மில்லி வீதம் குடிக்க சீதளக் காய்ச்சல், சளிக் காய்ச்சல், நுரையீரல் காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து நோய்களும் நீங்கும்.
உடலின் வேர்வை நாற்றம் நீங்க அகல கண்டங்கத்திரியின் இலையை இடித்து சாறு எடுத்து கொள்ள வேண்டும்.
அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து உடலில் தேய்த்தால் போதும், வேர்வை நாற்றம் நீங்கும்.
பாதவெடிப்புக்கு இலையை இடித்து சாறுடன் ஆளி விதை எண்ணெய் சம அளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசி வர வெடிப்பு மறையும்.
உடல் சூட்டின் காரணமாக சிறுநீர் பாதையில் எரிச்சல் உண்டாகலாம்.
இதை தடுக்க கண்டங்கத்திரி இலையை அம்மியில் வைத்து அரைத்து சாறு எடுத்து, அதில் ஒன்றரைத் தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து சாப்பிட்டால் இரண்டு மணி நேரத்தில் எரிச்சல் நீங்கும்.
குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் இருமலுக்கு கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி பொடி செய்து தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டால் இருமல் மறைந்து போகும்.
கண்டங்கத்திரி வேர், ஆடாதோடை வேர், சுக்கு, திப்பிலி, ஓமம் போன்றவற்றை இடித்து பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சுண்டக்காய்ச்சி காலை, மாலை குடித்து வர இருமல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
கண்டங்கத்திரி பழத்தை மண்பாண்டத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து குழம்பு பதமாக இருக்கும் போது ஒரு பங்கு நல்லெண்ணெய் ஊற்றி மெழுகு பதம் வர காய்ச்சி வடித்துப் பயன்படுத்திக்கொள்ளவும். இது வெண்குஷ்ட நோயை நீக்க வல்லது.
Also Read: Facts about tomatoes: மனிதனைப் போன்று தக்காளி பழத்தினுள் நியூரான்கள்..! அது செய்யும் வேலை என்ன..?
எனவே கண்டங்கத்திரியை ஒரு சாதாரண முள்செடி என்று எண்ணி அதை தூக்கி போடாமல் அதன் பயன் அறிந்து செயல்படுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக