Chettinad House Architecture: பல தலைமுறைகளைக் கடந்து நிற்கும் Chettinad வீடுகள்..!
Chettinad House Architecture: பல தலைமுறைகளைக் கடந்து நிற்கும் கலையமிக்க Chettinad வீடுகள்..!
செட்டிநாடு என்றவுடன் நம் நினைவுக்கு வருவது கலைநயமிக்க பெரிய அரண்மனை போன்ற வீடுகளும் அங்கு செய்யக்கூடிய உணவுகளும் தான்.
Chettinad House Architecture:
செட்டிநாடு பெயர்
கம்பீரமும், கலை நேர்த்தியும், ஆதிகால தொழில்நுட்ப மிக்க மாளிகைகளை கொண்டதுதான் சிவகங்கை மாவட்டம்.
இதன் ஒரு நகரே பல கலைநுட்பங்களுக்கு பெயர்பெற்ற காரைக்குடி.
காரைக்குடியை சுற்றிய பகுதிகளில் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளை கொண்ட 76 ஊர்களை கொண்ட பகுதியே செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது.
இந்தப் பகுதி பல்வேறு செழிப்புமிக்க வளங்கள் மூலம் தனிப் பெருமை பெற்றுள்ளது.
தனவணிகர்கள் என்றும் நகரத்தார் என்றும் அழைக்கப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் பெரும்பாலோர் வாழ்வதால் இப்பகுதி செட்டிநாடு என அழைக்கப்படுகிறது.
கட்டிடக்கலை
கட்டிடக்கலையில் மிகவும் புகழ்பெற்றது Chettinad வீடுகள்.
இந்த வீடுகள் 18-ம் நூற்றாண்டு முதல் 20-ம் நூற்றாண்டு தொடக்கம் வரை கட்டப்பட்ட வீடுகள் மிகவும் புகழ்பெற்றவை.
ஆயிரம் சன்னல்கள் கொண்ட வீடுகளும் இங்கு உள்ளன.
இங்குள்ள வீடுகள் மண்டபம் போன்று காணப்படும் என்பதால் மக்கள் தங்கள் வீட்டிலேயே தங்கள் வீட்டு விழாக்களை நடத்துவதையே வழக்கமாக கொண்டார்கள்.
இந்தக் கட்டிடக் கலை குறித்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர்கள், வல்லுனர்கள், ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு உள்ள வீடுகள் குறைந்தது 30 அறைகள் கொண்டதாக உள்ளது.
வீடுகளை வசீகரிக்க சிவப்பு, பச்சை, மஞ்சள் என வண்ணங்களை கொண்டு அலங்கரித்து உள்ளனர்.
Chettinad வீடுகள் 1 ஏக்கர் 2 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
மீதமிருக்கும் செட்டிநாடு:
வீட்டுக்கு முன் வாசல் ஒரு தெருவிலும் பின் வாசல் மற்றொரு தெருவிலும் அமைந்துள்ள மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளன.
பின்வாசலில் இருந்து பார்த்தால் முன்வாசலில் யார் இருக்கிறார்கள் என்பதைக் காண முடியும் வகையில், இரு வாசல்களும் நேர்க் கோட்டில் உள்ளன.
நகரமயமாக்கலில் அழிக்கப்படாமல் மீதமிருக்கும் செட்டிநாடு வீடுகளில் இந்த வீடும் ஒன்று.
செட்டிநாடு வீடுகள் அனைத்துமே, தரை மட்டத்தில் இருந்து, ஐந்து அடிக்கும் மேல் உயரத்திலேயே கட்டப்பட்டுள்ளன.
சாதாரண வீடுகளைப் போல் எல்லாம் வருடத்திற்கு ஒரு முறை இந்த செட்டிநாட்டு வீடுகளுக்கு வெள்ளை அடிக்கப்படுவதில்லை.
காரணம், அந்த அளவிற்கு வீடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளது.
வீடுகளின் நடுவே பெரிய வானவெளி முற்றம் அமைப்பு உள்ளது.
வீட்டுக்குள் காற்று மற்றும் வெளிச்சத்தை வானவெளி கொண்டு வருகிறது.
வீட்டின் முன்வாசலும் பின்வாசலும் வீட்டில் உள்ள மற்ற அறைகளும் இந்த வானவெளியில் வந்து சேர்வதாக இருக்கும்.
வீடு முழுவதும் பல தூண்கள் உள்ளன.
1980 ஆம் ஆண்டுக்கு முன்னரே:
இந்தத் தூண்கள் பர்மா தேக்கில் அமைக்கப்பட்டு உள்ளன.
நகரத்தார்கள் பர்மாவில் வணிகம் செய்துவந்த காரணத்தால் பர்மாவில் இருந்து தேக்குகள் இறக்குமதி செய்யப்பட்டு கட்டப்பட்டவை.
இந்த வீடுகள் அனைத்தும் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னரே கட்டபட்டவை.
இப்போதெல்லாம் இந்த வீடுகளை போல கட்ட நினைத்தால் கோடிக்கணக்கில் செலவாகும்.
அந்தக் கால்த்தில் சில ஆயிரம் ரூபாய் செலவில் கட்டி முடித்துவிட்டார்கள் நகரத்தார்கள், இன்று இந்த வீடுகளின் மதிப்பு கோடிகளில்…..
வீட்டின் முன்புறம் அனைவரையும் வரவேற்கும் வகையில் கலைநயத்துடன் அமைந்திருக்கும்.
வீட்டின் நுழைவு வாசல்:
நுழைவு வாசலின் இருபுறமும் பெரிய விசாலமான திண்ணை இருக்கும்.
அதில் கம்பீரமான மரத் தூண்கள் இருக்கும்.
முன் வாசல் கதவும் நிலையும் மிக நுட்பமான மர வேலைப்பாடுகள் கொண்டவையாக இருக்கும்.
இந்த நிலை ஒரு பண்பாட்டு அடையாளமாகவே மாறியுள்ளது.
தெய்வச் சிலைகளை நிலையின் மேல்புறத்தில் செதுக்கியிருகிறார்கள்.
கவனிக்கத்தக்கது:
இந்த வீடுகளில் கவனிக்கத்தக்க வேண்டிய விசயம், சுண்ணாம்பு கலவை, கருப்பட்டி, கடுக்காய்களை செக்கில் அரைத்து முட்டை வெள்ளைக்கரு கலந்த கலவையை கொண்டு சுவர் கட்டியுள்ளதாகக் கூறுகின்றனர்.
எவ்வித இரசாயன கலவைகளும் இன்றி கட்டப்பட்டதாலேயே மாவட்டம் முழுக்க எவ்வளவு வெப்பச் சலனம் நிலவினாலும் இங்கு இதமாக இருக்கிறது.
வீட்டின் முகப்பு திண்ணை (பட்டாலை) என அழைக்கப்படுகின்றது. பட்டாலையைத் தாண்டினால் வருவது வளவு (முற்றம்) ஆகும்.
வீட்டில் தேக்குமரத்தால் ஆன பெரிய கதவுகள், மரத்தினால் ஆன பீரோக்கள், ஊஞ்சல் என மரவேலைப்பாடு நிறைந்த பொருள்கள் கொண்டதாக உள்ளது.
ஆங்காங்கு உள்ள நிலைகளில், இராமாயண, மகாபாரதக் காட்சிகளை வரிசையாகச் செதுக்கி உள்ளனர்.
Also Read: Egypt city: 3,000 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதையுண்ட தங்க நகரம் கண்டுபிடிப்பு..!
தற்காலத்தில் சில வீடுகளை சற்று மாற்றியமைத்து நட்சத்திர விடுதிகளாக பயன்படுத்துகின்றனர்.
கானாடுகாத்தான் அரண்மனை போன்ற சில வீடுகளில் கூடுதலாக அறைகள் இருக்கும்.
கானாடுகாத்தானில் உள்ள ராஜா சர் அண்ணாமலை செட்டியார் வீடு செட்டிநாட்டு அரண்மனை என்று அழைக்கப்படுகிறது.
கானாடுகாத்தான் அரண்மனையில் திரைப்படங்களும் எடுத்துள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக