Interesting facts of Egypt: 3,000 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதையுண்ட தங்க நகரம் கண்டுபிடிப்பு..!
Interesting facts of Egypt: 3,000 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதையுண்ட தங்க நகரம் கண்டுபிடிப்பு..!
எகிப்தில் பூமிக்கு அடியில் புதைந்து போன 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
Interesting facts of Egypt:
இது எகிப்தில் பாரோ மன்னன் துத்தன்காமுனின் கல்லறையைப் போல மிகவும் மதிப்பு மிக்க மற்றொரு இடத்தை போன்றது.
தோண்டி எடுக்கப்பட்ட இந்த நகரத்தின் பெயர் ஆட்டென்.
இதை ‘தொலைந்து போன தங்க நகரம்’ என்றும் குறிப்பிடுகிறார் எகிப்தின் தொல்லியல் நிபுணர் ஸாஹி ஹவாஸ்.
பேரின்ப அதிர்ச்சி:
ஹவாஸின் கூற்றுப்படி எகிப்தில் இதுவரை கண்டறியப்பட்டவற்றிலேயே மிகப்பெரிய நகரம் இது.
பல வெளிநாட்டு அமைப்புகள் கண்டுபிடிக்க முயற்சி செய்து தோல்வியடைந்த இடம்.
கடந்த செப்டம்பரில்தான் இந்த இடம் தோண்டப்பட்டது.
சில வாரங்களிலேயே பழமையான நகரம் மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்டுவிட்டது.
Interesting facts of Egypt: இந்த நகரம் எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலிருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் லக்சர் என்ற நகருக்கு அருகில் அமைந்திருக்கிறது.
இந்த இடத்தை தோண்ட தோண்ட பேரின்ப அதிர்ச்சி ஆய்வாளர்களை சூழ்ந்து கொண்டது.
இந்த இடத்தை தோண்ட தொடங்கிய சில வாரங்களிலேயே அந்நகரத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள் பலவும் கிடைக்கத் தொடங்கின.
தற்போது வரை மக்கள் வசித்த பகுதிகள், சேதமடையாத மதில் சுவர்களும், சேமிப்பு கிடங்குகள், பேக்கரி மற்றும் அவன் போன்றவைகள் கிடைத்துள்ளன.
எகிப்து நாகரீகம் அந்நகர மக்கள் தங்கள் தினசரி வாழ்வில் பயன்படுத்திய பொருட்கள், கருவிகள் போன்றவற்றை வைத்து பார்க்கும் போது இது மிக நாகரீகமான நகரமாக இருந்திருக்கக் கூடும் என்கிறார் ஸாஹி ஹவாஸ்.
இந்நகரம் எகிப்தை ஆண்ட மூன்றாம் ஆமென்ஹோடெப் காலத்தை சேர்ந்த நகரமாக கருதப்படுகிறது.
இவர் பாரோ மன்னர்களுள் ஒருவர்.
துத்தன்காமுன் கல்லறை:
இவரது ஆட்சியில் மக்கள் பயன்படுத்திய நகைகள், உருள்வண்டு பொறிக்கப்பட்ட தாயத்துகள், வண்ணம் பூசப்பட்ட மண்பாண்டங்கள் போன்றவையும் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
அவரது ஆட்சி காலத்திற்குப் பிறகு அய் மற்றும் துத்தன்காமுன் ஆகியோரும் இந்நகரத்தில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்றும் அறியப்பட்டுள்ளது.
துத்தன்காமுன் கல்லறை 1922 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.
அதற்கு பிறகு இதுவே முக்கியமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது என்கிறார் பெஸ்டி பிரியன்.
இவர் எகிப்து வரலாற்றை ஆய்வு செய்து வருபவர்.
மேலும் இவர் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியராவார்.
Researchers:
1888 – 1889 ஆம் ஆண்டு வரையிலும் மேலும் 1912 – 1920 ஆம் ஆண்டு வரை பல ஆராய்ச்சியாளர்கள் இந்த இடத்தில் ஆராய்ச்சி செய்ய மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர்.
மேலும் பல பொக்கிஷங்களும், கல்லறைகளும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கிறோம் என்கிறார் ஹவாஸ்.
நியூ யார்க் நகரின் ‘மெட்ரோபோலிட்டன் மியூசியம்’ முதல் முறையாக இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள அதன் குழுவை அனுப்பிவைத்தது குறிப்பிடத்தக்கது.
Also Read: உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறந்த வழிகள்..!
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக தனது தொன்மையான வரலாற்றை உலகின் வெளிச்சத்திற்கு கொண்டு வர எகிப்து முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நாட்டின் பண்டைக்கால மம்மிகள் கெய்ரோ நகரில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
18 மன்னர்கள் மற்றும் 4 அரசிகளின் உடல்கள் இவற்றில் அடங்கும்.
தங்க நகரம்:
வரலாறுகள் எப்போதுமே நாம் வாழ்ந்த பழைய வாழ்க்கையின் பொக்கிஷத்தை நமக்கு எடுத்துக் காட்டும்..
புதைந்து போன நமது பழைய முகங்களைக் காணும்போது நாம் எப்படி வாழ்ந்தோம், எப்படி வந்தோம் என்பதை அறிய முடியும்.
அந்த வகையில் தொலைந்து போன இந்த தங்க நகரம் எகிப்தியர்களுக்கு மட்டுமல்ல,,
ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பல புதிய பழங்கதைகளைச் சொல்லும் என்று நம்பிக்கையோடு எதிர்பார்த்திருப்போம்.