What are insectivorous plants? பூச்சிகளை இரையாக உட்கொள்ளும் தாவரம் பற்றி தெரியுமா..?
What are insectivorous plants? பூச்சிகளை இரையாக உட்கொள்ளும் தாவரம் பற்றி தெரியுமா..?
ஈக்கள், சிலந்திகள் போன்ற பூச்சிகள் மற்றும் எறும்புகளை ஒரு தாவரம் உட்கொள்ளும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா?
What are insectivorous plants?
அப்படி ஒரு தாவரம் உள்ளது. அதன் பெயர் வீனஸ் ஃப்ளைட்ராப்!
ஆம் வீனஸ் ஃப்ளைட்ராப் என்று அழைக்கப்படும் ஒரு வகையான தாவரம் உயிரினங்களை உட்கொள்கிறது.
இது அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் உள்ள துணை வெப்பமண்டல ஈர நிலங்களுக்கு சொந்தமான ஒரு தாவரமாகும்.
இவை வட அமெரிக்காவில் ஈரமான சதுப்பு நிலப் பகுதிகளில் வளர்கின்றன.
Venus fly trap இலைகள் 3 செ.மீ. முதல் 12 செ.மீ நீளம் வரை வளரக்கூடியது.
இதை பார்க்க இலைகளின் அடிப்பாகம் பச்சையாகவும், மேல் பாகம் சிவப்பாகவும் இருக்கும்.
இலையை இரண்டாக மடிக்கும்படி இருக்கும்.
அதன் ஓரங்களில் நீண்ட முட்கள் வரிசையாக நீட்டிக்கொண்டிக்கும்.
மேலும் இலையின் நடுப்பகுதியில் ஜீரணச் சுரப்பிகள்கூட உள்ளன.
மின் சமிக்ஞைகள்:
இப்படி அழகான கவரும் வகையில் உள்ள சிவப்பு இலைகளைப் பார்த்ததும் பூச்சிகள் ஆவலோடு அருகில் வருகின்றன.
அப்படியே பூச்சிகள் இலை மீது அமர்ந்தவுடன், பூச்சியைப் பிடிப்பதற்குத் தயாராகிவிடுகிறது.
பூச்சிகள் ஊர்ந்து போகும்போது, இலையில் உள்ள உணர் முடிகளிலிருந்து மின் சமிக்ஞைகள் வெளிவந்து, இலையை மூட வைத்துவிடுகின்றன.
பூச்சிகள் சுதாரிப்பதற்குள் இவை மிக வேகமாக இலையை மூடிவிடுகின்றன.
பின்பு இலையின் இரு பக்கங்களிலும் உள்ள முட்கள் ஒன்றோடு ஒன்று இறுக்கிப் பிடித்துக்கொள்கின்றன.
கொஞ்சம் கொஞ்சமாகப் பூச்சியை இறுக்கிக்கொண்டே போனதும், ஒருகட்டத்தில் பூச்சிகள் இறந்து போய்விடுகின்றன.
இலையில் உள்ள ஜீரணச் சுரப்பிகளில் இருந்து வெளிவரும் நீர், பூச்சியை மெதுவாக ஜீரணம் செய்துவிடுகிறது.
3 முறை மட்டுமே:
உள்சென்ற பூச்சியின் உடல் ஜீரணமாவதற்கு 5 முதல் 10 நாட்கள் வரை ஆகும்.
அதுவரை இலை மூடியே இருக்கும். செரிக்கப்படாத பூச்சியின் பாகங்கள் இலை திறந்த பின்னர், வெளியே வந்துவிடும்.
இலையானது இறைச்சியை உண்ணுவதில்லை. உடலில் உள்ள நீர்ச் சத்தை மட்டுமே உறிஞ்சிக்கொள்கிறது.
ஓர் இலை அதிகபட்சம் 3 முறை மட்டுமே பூச்சிகளைப் பிடிக்க முடியும்.
மூன்றாவது தடவை பூச்சியைப் பிடித்த பிறகு, இலை திறப்பதே இல்லை. சிறிது நாட்களில் இலை பழுத்து, உதிர்ந்துவிடும்.
பொறியைப் போல இலை செயல்படுவதால் இவற்றுக்கு ‘ஃப்ளைட்ராப்’ என்று பெயர்.
ரோமானியக் கடவுள் வீனஸையும் பெயரோடு சேர்த்துக்கொண்டனர்.
செடியில் அமர்ந்திருந்த குளவி அது மரணப் பொறி என்று அறியாமல், அதன்
சிலந்தி, ஈக்கள், கம்பளிப்பூச்சி, வெட்டுக்கிளி, அட்டை போன்றவை இலைக்கு வந்தால் உயிர் தப்பி போக முடியாது.
12 மணி நேரம் காத்திருக்க வேண்டும்:
குச்சி, கல் போன்ற உயிரற்ற பொருட்கள் இலை மீது விழுந்தாலும், இலை தானாக மூடிக்கொள்ளும்.
ஆனால் அவற்றை ஜீரணம் செய்ய முடியாமல், 12 மணி நேரங்களுக்குப் பிறகு இலையை விரிக்கும்.
காற்றில் குச்சியும் கல்லும் வெளியே விழ வேண்டும்.
குறும்புக்காக ஒரு பென்சிலை இலைக்குள் வைத்தாலும் அதை எடுப்பதற்கு 12 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.
வீனஸ் ஃப்ளைட்ராப் வளரும் நிலத்தில் தேவையான சத்துகள் கிடைப்பதில்லை.
பரிமாண வளர்ச்சியில் காலப்போக்கில் சத்துகளைப் பெறுவதற்கான பண்புகள் உருவாக ஆரம்பித்தன.
Also Read: spinifex: ஸ்பைனிஃபெக்ஸ் புற்கள் அவற்றின் மோதிர வடிவங்களை எவ்வாறு பெற்றன?
இலைகளை நாடி வரும் பூச்சிகளிலிருந்து தங்களுக்குத் தேவையான சத்துகளைப் பெற்றுக்கொள்ள ஆரம்பித்தன.
இப்படித்தான் வீனஸ் ஃப்ளைட்ராப் உட்பட பல பூச்சி உண்ணும் தாவரங்களும் அசைவத்துக்கு மாறின.
பரிணாம வளர்ச்சி:
இந்தப் பூச்சி வேட்டை உத்தியை ஆராய்ந்தபோது, பொதுவாகத் தாவரங்களுக்கு இருக்கும் தற்காப்பு அம்சங்களே, வீனஸ் ஃப்ளைட்ராப்புக்கும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
விலங்குகள் இலைகளைச் சாப்பிடாமல் இருப்பதற்காகச் சில தாவரங்கள் முட்களைப் பெற்றுள்ளன.
சில தாவரங்கள் மோசமான வாசனையை வெளியிடுகின்றன.
அதே போலத்தான் வீனஸ் ஃப்ளைட்ராப் செடிகளும் தங்களைத் தாக்க வரும் பூச்சிகளை எதிர்க்க ஆரம்பித்தன.
காலப்போக்கில் இந்தப் பண்பு மரபணுவில் பதிந்து, எதிரியை இரையாக மாற்றும் அளவுக்குப் பரிணாம வளர்ச்சிப் பெற்றுவிட்டது என்கிறார்கள்.
இப்படியும் ஒரு தாவரமா..!