Best food for thyroid: தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்திருக்க சாப்பிட வேண்டிய எளிய உணவுகள்..!
Best food for thyroid: தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்திருக்க சாப்பிட வேண்டிய எளிய உணவுகள்..! நமது உடலின் மிகவும் முக்கியமான உறுப்புகளில் தைராய்டு சுரப்பியும் ஒன்றாகும். Best food for thyroid: அதன் ஆரோக்கியமான செயல்பாடு என்பது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியமானது. இன்றைய காலகட்டத்தில் தைராய்டு என்பது பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரையும் தாக்கும் ஒரு நோயாக மாறிவிட்டது. குறிப்பாக, பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்னையாகவும் தைராய்டு உள்ளது. இதற்கான உணவுமுறை பற்றி பார்க்கும் முன் தைராய்டு பற்றிய அடிப்படையான தகவல்களைத்(Health tips) தெரிந்துகொள்வோம். இந்த பட்டாம்பூச்சி வடிவ உறுப்பு நம் கழுத்தின் முன் அமர்ந்துள்ளது. உடல் வெப்பநிலை, சுவாசம், இதய துடிப்பு, உடல் எடை மற்றும் பெண்களில் மாதவிடாய் சுழற்சி போன்ற முக்கிய உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு சுரப்பி சரியாக செயல்பட ஆரோக்கியமாக சாப்பிட வேண்டியது அவசியம். நமது உணவு வளர்சிதை மாற்ற அமைப்பை வலுப்படுத்தும் அளவுக்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இது சரியான தைராய்டு செயல்பாட்டை பராமரிக்க மேலும் உதவுகிறது. எ...